குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் விசாவை வழங்க கடந்தாண்டு அமீரக அரசு அறிவித்தது. கலை, மருத்துவம் என பல்வேறு நபர்களுக்கு இதுவரையில் கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் கோல்டன் விசாவிற்காக விண்ணப்பிக்கலாம் என அமீரக அரசு தெரிவித்திருந்தது.
இதன் நீட்சியாக அஸ்தர் மருத்துவமனையைச் சேர்ந்த 319 மருத்துவர்களுக்கு கோல்டன் விசா வழங்க அமீரக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் நஹ்யான் மருத்துவர்கள் அனைவரும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு இறுதியில் கொரோனா தொற்றுக்காலத்தின் போது திறம்பட செயல்பட்ட 212 மருத்துவர்களுக்கு கோல்டன் விசா வழங்க துபாய் ஆட்சியாளர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
