UAE Tamil Web

90,000 குடும்பங்களுக்கு மின்சாரம் அளிக்க இருக்கும் மிகப்பெரிய சூரிய ஒளிப் பூங்கா – துபாய் ஆட்சியாளர் துவங்கிவைத்தார்..!

SHEIKH MOHAMMED

துபாயில் அமைந்துள்ள முகமது பின் ரஷீத் சோலார் எனெர்ஜி காம்ப்ளெக்ஸ் திட்டத்தின் முதல் பகுதி துவங்கப்படுவதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரே இடத்தில் அமையப்பெற்ற உலகின் மிகப்பெரிய சோலார் எனெர்ஜி காம்ப்ளெக்ஸ் இதுதான்.

இப்போது துவங்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலமாக 90,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தினை அளிக்க முடியும். 2030 ஆம் ஆண்டிற்குள் 5000 மெகாபைட் ஆற்றலை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவருட இறுதிக்குள் கிளீன் எனெர்ஜியின் பங்கு 13 சதவீதமாக இருக்கும் எனவும் துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

SHEIKH MOHAMMED
0 Shares
Share via
Copy link