UAE Tamil Web

“கத்தார் மக்கள் அனைவரும் எனது உறவினர்கள்” – கத்தார் மன்னரைச் சந்தித்த ஷேக் முகமது உருக்கம்..!

qatar - dubai

மத்திய கிழக்கில் நிலவிவரும் அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் துணையோடு ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இன்று ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய கிழக்கின் ஆட்சியாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இதில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள பாக்தாத் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈராக்கின் பிரதமர் முஸ்தபா அல் காதிமி விமான நிலையத்திற்கே சென்று துபாய் ஆட்சியாளரை வரவேற்றார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி அவர்களை துபாய் ஆட்சியாளர் சந்தித்தார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துபாய் ஆட்சியாளர்,” கத்தார் மன்னர் தமிம் என்னுடைய சகோதரனும் நண்பனும் ஆவார்.. கத்தார் மக்கள் என்னுடைய உறவினர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஈராக்கில் நடைபெறும் இந்த மாநாடு வெற்றிகரமாக அமையவும் ஈராக் மக்கள் வாழ்வில் வளமும் செழிப்பும் பெருக வாழ்த்துவதாக துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

“நம்முடைய மக்கள் ஆரோக்கியத்துடனும் செழிப்பாகவும் வாழ வாழ்த்துகிறேன்” என கத்தார் மன்னரிடம் துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.

qatar - dubai
1 Share
Share via
Copy link