UAE Tamil Web

மறைந்த மஜீத் அல் ஃபுட்டைம் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய துபாய் ஆட்சியாளர்..!

MBR-Futtaim-condolence

அமீரகத்தின் முதல் பணக்காரரும் முக்கிய தொழிலதிபருமான மஜீத் அல் ஃபுட்டைம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மஜீத் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பின் போது துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும உடனிருந்தார்.

மஜீத் அல் ஃபுட்டைமின் ஆன்மா சாந்தியடையவும் அவருடைய இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தினர் மனவலிமையை அடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.

மஜீத் அல் ஃபுட்டைம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap