UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரால் திறக்கப்பட்ட ‘இன்ஃபினிட்டி’ பாலம் – அசத்தல் புகைப்படங்கள் வெளியீடு

துபாயில் ‘இன்ஃபினிட்டி’ என்ற புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமரியாதைக்குரிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ‘இன்ஃபினிட்டி’ பாலத்தை திறந்து வைத்துடன், நம்ப முடியாத அசத்தல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

“இது ஒரு புதிய உலகளாவிய பொறியியல், கலை மற்றும் கட்டிடக்கலையின்  தலைசிறந்த படைப்பு. எங்கள் பாலங்கள் எதிர்காலத்தை நோக்கி செல்கின்றன. எங்கள் லட்சியங்கள் முடிவற்றவை” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த பாலம் குறித்த அறிவிப்பு முதன் முதலில் 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தின்படி, பாலம் சிற்றோடையின் குறுக்கே செல்கிறது. இது 300 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் இரு திசைகளிலும் 24,000 வாகனங்கள் செல்ல முடியும்.

“இது சிற்றோடைக்கு 15 மீட்டர் உயரத்தில் உள்ளது. பெரிய படகுகள் மற்றும் படகுகளுக்கு 24 மணி நேரமும் செல்ல முழுமையான சுதந்திரத்தை அனுமதிக்கிறது” என்று RTA கூறியுள்ளது.

ஷேக் ரஷீத் தெரு, அல் மினா, அல் கலீஜ் மற்றும் கெய்ரோ சாலைகள் வழியாக 13 கிமீ நீளம் கொண்ட 5 பில்லியன் திர்ஹம் செலவில் ஷிண்டாகா காரிடார் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

3 Shares
Share via
Copy link