UAE Tamil Web

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு: “நாட்டுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்”- துபாய் ஆட்சியாளர்..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

இங்கிலாந்தின் இளவரசரான பிலிப் நேற்று தனது 99 வது வயதில் காலமானார். இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் வட அயர்லாந்தின் அரசியான இரண்டாம் எலிசபத் அவர்களுக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிலிப் அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுடன் நட்பு பாராட்டியதாக தெரிவித்திருக்கும் துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தனது வாழ்க்கையை குடும்பம் மற்றும் தேசத்திற்காக அர்பணித்தவர். ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசி மற்றும் அந்நாட்டு மக்களுக்கு அமீரக மக்கள் மற்றும் நான் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.