துபாய் EXPO 2020 இந்திய அரங்கை அமீரக துணைப் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் பார்வையிட்டார்.
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் உடன் துபாய் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உடனிருந்தார்.த்
துபாய் EXPO 2020-வில் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் காணவும், முன்னேற்றத்திற்கு உண்டான புதிய கூட்டமைப்புகளை கண்டறிய தனித்துவமான தளமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
துபாய் EXPO 2020-வில் 192 நாடுகள் பங்கேற்பதன் மூலம் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும். உலகம் முழுவதிலும் இருந்து அறிவு, அனுபவங்கள் மற்றும் புதுமைகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை இந்த தளம் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கலை, கலாச்சாரம், இலக்கியம், சினிமா, உணவு வகைகள், இயற்கை அதிசயங்கள், ஆரோக்கியம், வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பத் துறை அனைத்தையும் பார்வையாளர்களுக்கு EXPO 2020வில் காட்சிக்குட்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.