49 வது அமீரக தேசிய தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தான் எழுதிய தேசப்பற்றுமிக்க கவிதையை அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.
அமீரகத்தினை கட்டியெழுப்பிய தலைவர்களான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் முகமது பின் சயீத் ஆகியோருக்கு தி நேஷன்ஸ் டே (A Nation’s Day) எனத் தலைப்பிட்ட தனது கவிதை மூலம் துபாய் ஆட்சியாளர் அஞ்சலி செலுத்தினார்.
துபாய் ஆட்சியாளர் கிளாசிக் அரபியை உள்ளூர் பேச்சுவழக்கு நாபதியுடன் இணைத்து, தேசம், அதன் ஸ்தாபக தந்தைகள் மற்றும் இன்றைய தலைவர்கள் ஆகியோர் மீதுள்ள தனது பெருமையை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஷேக் முகமது பின் சயீத் ‘பு காலித்’ க்கு சிறப்பு அஞ்சலி செலுத்தி, அவரை ஒரு சிறந்த தலைவர் என்று கவிதையில் ஆட்சியாளர் வர்ணித்திருக்கிறார்.
قصيدة عيد وطن نهديها لأغلى وطن .. pic.twitter.com/62OiFhOXF8
— HH Sheikh Mohammed (@HHShkMohd) December 1, 2020
ஆழமான வேரூன்றிய பக்தி, தேசபக்தி உணர்வுகள், நாடு, அதன் தலைவர்கள் மற்றும் மக்கள் மீதான அன்பு, அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களுக்கு மகிழ்ச்சியின் புகலிடமாக இருக்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அதன் சாதனைகளுடன் முன்னேற வேண்டும், மற்றும் உயர்மட்ட நாடுகளிடையே அதன் முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என தனது கவிதையில் துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கவிதையை பு காலித் அவர்களை பெருமைப்படுத்தி ஷேக் முகமது முடித்திருக்கிறார்.