UAE Tamil Web

“துபாய் எக்ஸ்போவிற்கு உங்களை வரவேற்கிறேன்” – எக்ஸ்போ சிட்டியைப் பார்வையிட்ட துபாய் ஆட்சியாளர் ட்வீட்..!

sheikh mohammed

உலகின் பிரம்மாண்ட கண்காட்சியான துபாய் எக்ஸ்போ 2020 அடுத்தமாதம் (அக்டோபர் 1) துவங்க இருக்கிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 191 நாடுகள் பங்கேற்கும் இந்த மாபெரும் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துபாய் எக்ஸ்போ 2020 சிட்டியில் நடைபெற்றுவரும் இறுதிகட்டப் பணிகளை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” துபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்றுவரும் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்தேன். கொரோனாவிற்குப் பிறகு நடைபெறும் உலகளாவிய பிரம்மாண்ட கண்காட்சி இதுவாகும். இன்னும் 30 நாட்களில் துவங்க இருக்கும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் 191 நாடுகள் பங்கேற்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட மற்றொரு பதிவில் “இக்கண்காட்சி இதுவரை எங்கும் நிகழாத வண்ணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதை உலகத்திற்கு தெரிவிக்கிறோம். இந்த ஆறு மாத கால கண்காட்சி மனித குலத்திற்கு பல்லாண்டுகளுக்கு துணைபுரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களை துபாய் எக்ஸ்போவிற்கு வரவேற்பதாக துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

sheikh mohammed
2 Shares
Share via
Copy link