UAE Tamil Web

அவர் இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல.. தனது தந்தையின் நினைவுநாளில் துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

sheikh Mohammed

அமீரகத்தின் தந்தையும் துபாயின் முன்னாள் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களின் 31வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஷேக் ரஷீத்தின் மகனும் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில்,” எப்போதும் நாம் இருப்பதற்குக் காரணமாக இருந்தவரை இழப்பது மிகக் கடினமானது. இன்று நான் மற்றும் இந்தத் தேசம் இருப்பதற்கு அவர் தான் மிக முக்கியக் காரணம்” என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனது தாத்தாவும் முன்னாள் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் ரஷீத்தின் நினைவுநாளை முன்னிட்டு ஷேக் ஹம்தான் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ஷேக் ரஷீத்தின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக தனது மகனுக்கு ரஷீத் என ஷேக் ஹம்தான் பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

sheikh Mohammed
3 Shares
Share via
Copy link