தீப ஒளித் திருவிழாவான தீபாவளி நேற்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அபுதாபியின் இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
نهنئ المحتفلين بمناسبة ديوالي ” مهرجان الأضواء”، متمنين دوام السلام والازدهار والخير للجميع.
— محمد بن زايد (@MohamedBinZayed) November 4, 2021
அபுதாபி இளவரசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” ஒளிகளின் திருவிழாவான தீபாவளியன்று அனைவர்க்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அமைதி, வளம் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
