UAE Tamil Web

ஃபார்முலா 1 இறுதிப்போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த அமீரக பிரதமர் மற்றும் அபுதாபி இளவரசர்..!

SHEIKH AND NAHYAN

அபுதாபியின் யாஸ் மெரினா சர்க்யூட்டில் நேற்று ஃபார்முலா 1 இறுதிச்சுற்று நடைபெற்றது. இதனை, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பஹ்ரைன் பட்டத்து இளவரசரும் அந்நாட்டின் பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா ஆகியோர் கண்டுகளித்தனர்.

“இன்று நான் அபுதாபியில் நடைபெற்ற அருமையான ரேஸை கண்டுகளித்தேன். அருமையான சூழல் மற்றும் அமைப்பு. உலகத் தரத்திலான போட்டிகள் அமீரகத்தில் மீண்டும் நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது” என துபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.


அபுதாபி இளவரசர் இதுகுறித்துப் பேசுகையில்,” இன்று எனது சகோதரர் ஷேக் முகமது அவர்களுடன் F1 பந்தயத்தின் இறுதிச் சுற்றை கண்டுகளிக்கும் பெருமையைப் பெற்றேன். அபுதாபியில் நிறைவடைந்த இப்போட்டியைக் காண அமீரகம் முழுவதிலும் இருந்து மக்கள் குவிந்திருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap