UAE Tamil Web

“அமீரகத்தின் எதிர்காலம் உங்களுடைய கைகளில் தான் உள்ளது” – துபாய் ஆட்சியாளர் சூப்பர் வெளியிட்ட வீடியோ..!

SHEIKH MOHAMMED

இன்று சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரக இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துபாய் இளவரசர்,” அமீரகத்தின் எதிர்காலம் உங்களுடைய கரங்களில் இருக்கிறது என இந்நாளில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய இளைஞர்களே நம்முடைய வெற்றியாளர்கள். நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் நிறைவேறியிருக்கின்றன. உங்களுடைய சாதனைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான இடமாக அமீரகம் என்றென்றும் திகழும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக இளைஞர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,” பெருமைவாய்ந்த நமது வரலாற்றை நம் மக்கள் கஷ்டப்பட்டு செதுக்கினர். நம்முடைய நாளைய உலகத்தினை வடிவமைக்க இருக்கும் இளைஞர்களை ஆதரிப்போம். நம் அனைவருக்குமான வளமான, ஒளிமிக்க எதிர்காலத்தைப் படைக்க இருக்கும் இளைஞர்களைக் கொண்டாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHEIKH MOHAMMED
0 Shares
Share via
Copy link