UAE Tamil Web

துபாய் மசூதிகளில் சேவையாற்றிவரும் இமாம்களுக்கு கோல்டன் விசா வழங்க துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது உத்தரவு!

துபாய் பள்ளிவாசல்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இமாம்களாக சேவையாற்றுபவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கப்படும் என்று துபாய் ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைத் தலைவரும் பிரதமருமான மதிப்பிற்குறிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் உத்தரவுப்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக மசூதிகளின் இமாம்கள், முஅத்தின்களுக்கு (துணை இமாம்) நிதி போனஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும் இவர்களுக்கு தங்க குடியுரிமை வழங்கவும் துபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்.

ஈத் அல்-பித்ருக்கு முன்னதாக இந்த நடவடிக்கை அமல்படுத்த இருப்பதாக தெரிவிகப்பட்டுள்ளது.

மசூதிகளின் இமாம்கள் மற்றும் முஅத்தின்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு, ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் நன்றி தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் நீண்ட கால குடியிருப்பு விசாக்களுக்கான புதிய முறையை அமல்படுத்தியது. அதாவது  வெளிநாட்டவர்கள் அமீரகத்தில் ஸ்பான்சரின் உதவியின்றி கோல்டன் விசா பெற்று வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் அமீரகத்தில் 100 சதவீத உரிமையை பெறலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap