UAE Tamil Web

உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்குமாறு துபாய் ஆட்சியாளருக்கு அழைப்புவிடுத்த அமெரிக்க அதிபர்..!

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்புவிடுத்துள்ளார்.

ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதி அமெரிக்க அதிபரால் காணொளிக் காட்சி மூலமாக இந்த மாநாடானது நடத்தப்பட இருக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் துபாய் ஆட்சியாளர் பசுமை குறித்த அமீரகத்தின் பார்வையையும் காலநிலை மாற்றத்திற்கான அமீரக அரசின் திட்டங்கள் குறித்தும் பேச இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 உலகத் தலைவர்களை இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்புவிடுத்திருக்கிறார். கார்பன் மாசுபாட்டிற்கான புதிய இலக்கை நிர்ணயிக்கவும் காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரவும் இம்மாநாட்டை பைடன் நடத்த இருக்கிறார்.

இந்தத் திட்டத்தின் அவசரம் குறித்தும் இதனால் ஏற்படும் பொருளாதார நன்மைகள் பற்றியும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உறுதியான திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தையும் இம்மாநாடு சுட்டிக்காட்ட இருக்கிறது.

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large
0 Shares
Share via
Copy link