UAE Tamil Web

“2020 எனக்குக் கற்றுக்கொடுத்தது இதைத்தான்” – மனம் திறந்த துபாய் ஆட்சியாளர்..!

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large

இந்த வருடம் முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ளன. இந்தாண்டு நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்ன? என்பது குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

“2020 சவால்கள் மற்றும் சாதனைகளின் ஆண்டாக இருந்திருக்கிறது. இது நம் நாட்டின் உண்மையான மதிப்புகள் வெளிப்பட்ட ஒரு வருடம். நம் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஈகையின் மூலம் நாம் பலமாக இருக்கிறோம் என்பதை நிரூபித்த ஒரு வருடம். குடும்பங்கள் ஒன்றிணைந்து அதன்மூலம் நம் இதயங்கள் ஒன்றிணைந்த வருடம். மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதன் பொருட்டு, இந்த ஆண்டு நம் அனைத்து பணிக்குழுக்களையும் ஒருங்கிணைத்தது. நெருக்கடியைச் சரியாகக் கையாள்வதில் ஐக்கிய அரபு அமீரகம் மகத்தான வெற்றியைப் பெறும் என்பதை நிரூபித்துள்ள ஒரு ஆண்டு இது”

2020 நமக்கு நிறைய கற்றுக் கொடுத்தது … வலிமை ஒற்றுமையில்தான் உள்ளது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். குடும்பத்திலேயே மகிழ்ச்சி உறைந்திருக்கிறது… சிறந்து விளங்குவது ஈகையில் இருக்கிறது… அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் முன்னதாக ஆரோக்கியம் நிலைபெறுகிறது … பிரபஞ்ச பயணத்திற்கும் அணுவைப் பிளக்கவும் இளைஞர்கள் உதவுவார்கள் எனும் நம்பிக்கை பிறக்கிறது … ஐக்கிய அரபு அமீரகம் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதையும், எல்லாவற்றையும் மற்றும் எவரையும்விட ஒற்றுமை எண்ணம் வலுவானது என்பதையும் இந்த ஆண்டு நமக்குக் கற்பித்தது” என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap