நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி நாளினைக் கொண்டாட, அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள், அரசு ஊழியர்களை அழைப்பு விடுப்பதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
அமீரக கொடி நாளான நவம்பர் 3 அன்று, அமீரகத்தின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அமீரகத்தின் 50 வது ஆண்டு இது என்பதால் இந்தக் கொடி நாளும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஷேக் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”சகோதர சகோதரிகளே அமீரகம் தனது 50 வது ஆண்டு கொடி தினத்தை நவம்பர் 3 ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. அன்றைய தினம் குடிமக்கள், நிறுவனங்கள், அமைச்சகங்கள் காலை 11 மணிக்கு அமீரகக் கொடியை ஏற்றி நம்முடைய தேசத்தின் ஒற்றுமையையும் குறிக்கோளையும் இவ்வுலகம் அறியச்செய்ய அழைப்பு விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
الإخوة والأخوات ستحتفل دولة الإمارات بيوم علمها في عامها الخمسين في الثالث من نوفمبر القادم..سنرفعه على وزاراتنا ومؤسساتنا بشكل موحد الساعة الحادية عشرة صباحاً .. رمز الدولة والسيادة والوحدة للخمسين الماضية سيبقى معنا للخمسين القادمة ليرسخ الانتماء والولاء والمحبة لتراب الإمارات
— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 26, 2021
