UAE Tamil Web

“நாங்கள் இன்று ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம்”.. ஷேக் முகமதுவின் மகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..

baby

அமீரகத்தின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மகளான ஷேக்கா லத்திஃபா பின்த் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

- Advertisment -

துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் தலைவராக உள்ள ஷேக்கா லத்திஃபா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மகள் பிறந்துள்ள தகவலை அறிவித்துள்ளார். அதில் “Shaikha bint Faisal AlQassimi” என்ற பெண் குழந்தையுடன் நாங்கள் இன்று ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று கூறியுள்ளார்.

ஷேக் ஃபைசல் சவுத் காலித் அல் காசிமியை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஷேக்கா லத்திஃபா. இத்தம்பதிக்கு தற்போது பிறந்துள்ள மகள் இரண்டாவது குழந்தையாகும். 2018 ஜூலையில் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது