UAE Tamil Web

அமீரகத்திற்கு பெருமை சேர்த்த Sheikha Mozah.. AW609 tiltrotorஐ இயக்கிய முதல் பெண் பைலட் – இந்த பெண்சிங்கத்திற்கு ஒரு Royal Salute!

அமீரகத்தை சேர்ந்த ஷெய்கா மொசா பின்ட் மர்வான் அல் மக்தூம் தான் AW609 Tiltrotorஐ இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருடைய இந்த சாதனை பெண் விமானிகள் சிவில் விமானங்களை இயக்க ஒரு மிகப்பெரிய மையில்கல்லாக அமைந்துள்ளது.

Philadelphiaவில் அமைந்துள்ள Aerospace Defense and Securityயில் உலகளாவிய உயர்தொழில்நுட்பம் கொண்ட லியோனார்டோவின் US Helicopter Headquatersக்கு சென்றபோது ஷேக்கா மோசா இந்த விமானத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த புரட்சிகரமான விமானத்தை சோதனை செய்த முதல் பெண் விமானி என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, பெண்களுக்கான ஒரு உச்சவரம்பைத் தகர்க்கும் வாய்ப்பாக நான் கருதுகின்றேன்” என்றார் அவர்.

“என்னால் அதைச் செய்ய முடியும் என்றால், போதுமான மனஉறுதியுடன் இருக்கும் எந்த பெண்ணிற்கும் அது சாத்தியமே என்பதை நிரூபிக்க, நான் எப்போதும் என் வரம்புகளுக்கு அப்பால் செல்வதை தவிர்ப்பதில்” என்றும் அவர் கூறினார்.

அதிக வேகம், உயரம் மற்றும் பல திறன்களை ஒன்றிணைக்கும் சிவில் விமானப் போக்குவரத்து platformல் AW609 மிகவும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

VIPகளை Escort செய்வது, அவசர மருத்துவ சேவைகள், தேடல் மற்றும் மீட்பு மற்றும் அரசாங்க பயன்பாடுகள் உட்பட பல்வேறு வகையான பணிகளில் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது. AW609 ஆனது 500 km/h க்கும் அதிகமான வேகத்தில் பறக்கக்கூடியது. அதிகபட்சமாக சுமார் 1,400 km வேக வரம்பில் இந்த ஹெலிகாப்டரால் பறக்க முடியும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap