துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் அமீரக தேசிய தினமான நேற்று தனது இரட்டைக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
மக்களால் செல்லமாக ஃபஸ்ஸா என்றழைக்கப்படும் ஹம்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.
View this post on Instagram
இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தைக்கு ஷேக்கா பின்ட் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் எனவும் ஆண் குழந்தைக்கு ரஷீத் பின் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அரபு மொழியில் ஷேக்கா என்றால் இளவரசி என்றும் ரஷீத் என்றால் சரியாக வழிநடத்துபவர் எனவும் பொருளாகும்.