UAE Tamil Web

துபாயில் சிவசேனா எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்..!

துபாயில் சிவசேனா எம்.எல்.ஏ ரமேஷ் லட்கே, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

54 வயதான எம்.எல்.ஏ ரமேஷ் லட்கே தனது குடும்பத்தினருடன் துபாயில் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த போது, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் லட்கே, மும்பை மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவரது உடல் இன்று மும்பைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

அவரது உடலை மும்பைக்கு எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap