அமீரகத்தில் முழுவதும் வாகனங்கள் நிறுத்த விடுமுறை நாட்களில் பார்க்கிங் கட்டணமின்றி இலவசமாகவே இருக்கும். தற்போது ஷார்ஜா பார்க்கிங் கட்டணம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மற்றும் அரசின் விடுமுறை நாட்களில் இலவசமாக வாகனங்களை பார்க்கிங்க் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஷார்ஜாவில் பிப்ரவரி 14 தேதி முதல், வாரத்தின் ஏழு நாட்களிலும் மம்சார் கார்னிச் (Mamzar Corniche) மற்றும் அல்-கான் (Al Khan) பகுதிகளில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்து கொள்ளும் சேவையை ஷார்ஜா அறிமுகப்படுத்தியுள்ளது.
ஷார்ஜாவில்:
- 1 மணி நேரத்திற்கான பொது பார்க்கிங் கட்டணம் 2 திர்ஹமுஸ்.
- 2 மணிநேரத்திற்கு 5 திர்ஹமும்ஸ்.
- 3 மணிநேரத்திற்கு 8 திர்ஹமும்.
மேலும் ஷார்ஜா டிஜிட்டல் என்னும் ஆப் மூலமும் பார்க்கிங் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
இது குறித்து ஷார்ஜாவின் பொது பார்க்கிங் துறை இயக்குனர் அகமது அபு கஜியன் கூறியதாவது “இந்த புதிய பார்க்கிங் நடவடிக்கையனது, ஆங்காங்கே வழிமறித்து நிறுத்தக்கூடிய வாகனங்களை தடுக்கும். பல வாகன ஓட்டிகள், வாகனங்களை நீண்ட நேரம் பார்க்கிங்கில் விட்டு விடுகின்றனர். அதனால் ஷார்ஜாவின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் அல் மம்சார் பகுதியில் கட்டண பார்க்கிங்கை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார்.