UAE Tamil Web

அபுதாபியில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த ஹோட்டலுக்கு பூட்டு!

அபுதாபி நகரின் மையத்தில் அமைந்துள்ள பிரபல உணவகமான அல் இப்ராஹிமி உணவகம், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களை மீறியதற்காக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA) மூடப்பட்டுள்ளது.

இந்த உணவகத்திற்கு பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மீறல்களை சரி செய்யத் தவறியதால் இதனை மூட ADAFSA உத்தரவிட்டது.

மேலும் இந்த உணவகம் அபூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதாலும், ஆரோக்கியமற்ற உணவுத் தயாரித்து விற்பனை செய்ய தவறியதாலும் முடப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் 2 ஆம் எண் சட்டத்தின் அடிப்படையில், பலமுறை எச்சரித்தும், விதிகளை கடைபிடிக்கத் தவறினால் நிர்வாகம் மூடப்படும் என்று சட்டத்தின் அடிப்படையில் இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களின் அனைத்து உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தரங்களையும் பூர்த்தி செய்து, அனைத்து மீறல்களையும் அகற்றிவிட்டால் உணவகம் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று ADAFSA கூறியது.

மேலும், 800555 என்ற எண்ணில் அபுதாபி அரசாங்கத் தொடர்பு மையத்தைத் தொடர்புகொண்டு உணவுப் பாதுகாப்பு மீறல்கள் குறித்து புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களை ADAFSA கேட்டுக்கொண்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap