பெரும்பாலும் குட்டி குழந்தைகளுக்கு ஆசை வித்தியாசமாக வரும். அதை சிலர் சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள். சில குட்டீஸுக்கோ அந்த ஆசையை உடனே செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசைக்காக துபாய் போலீஸாரிடம் தூது போயிருக்கிறார்கள் பெற்றோர் ஒருவர்.
அயோஷா மற்றும் ஹமத் அஹ்மத் அல் முல்லாவின் குடும்பத்தினர் போலீஸ் செயலி மூலம் காவல்துறைக்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளனர். அயோஷாவும், ஹமத்தும் போலீஸ் போல் உடை அணிந்து சூப்பர் காரில் சவாரி செய்ய விரும்புவது என்பது தான் அது.
பொது துறையில் இருக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு துறை, Hamleysயுடன் இணைந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றி இருக்கின்றனர். அயோஷா மற்றும் ஹமத்தினை நேரில் சந்தித்தனர். Security Inspection Department (K9 unit)க்கு அவர்களை காவலர்கள் அழைத்து வந்தனர்.
பாதுகாப்பு விழிப்புணர்வு துறையின் இயக்குனர் புட்டி அஹ்மத் பின் தர்விஷ் அல் ஃபலாசி கூறுகையில், ‘குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்’. இந்த முயற்சியானது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
இந்த குட்டீஸ் ஆசைப்படி அவர்களுகென அளவெடுத்து தைத்த யூனிபார்மினை போட்டுக்கொண்டு சூப்பர்காரில் செம சவாரி செய்து எஞ்சாய் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.