இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் இந்தாண்டு விமர்சையாக உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தருணத்தை கொண்டாடும் வகையில் இந்திய ஒன்றிய அரசு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த #AzaadiKaAmritMahotsav.
இதற்கென உருவாக்கப்பட்ட https://rashtragaan.in என்ற இணையதளத்திற்குள் சென்று தேசிய கீதத்தை பாடி வீடியோ எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமீரகத்திற்கான இந்தியத் தூதர் திரு.பவன் கபூர் அமீரக வாழ் இந்தியர்கள், இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Join the nation in singing the #Rashtragaan.
I appeal to all Indians in the UAE to join this initiative on the occasion of #AzaadiKaAmritMahotsav.
You can record your video at https://t.co/oLRLSXDqKH@meaindia @indiandiplomacy @cgidubai pic.twitter.com/DebBC1wlvq
— Amb Pavan Kapoor (@AmbKapoor) August 5, 2021
இதனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, அவரே வீடியோ எடுத்தும் சமர்ப்பித்திருக்கிறார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது தேசிய கீதத்தைப் பாடி சமர்ப்பிக்க வலியுறுத்திய அவர், இதற்காக சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அவரது சான்றிதழையும் அவர் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
After uploading your video of singing the #Rashtragaan don’t forget to download your personal certificate @MinOfCultureGoI @MEAIndia pic.twitter.com/lnJGSuxIAg
— Amb Pavan Kapoor (@AmbKapoor) August 5, 2021
