அமீரகத்தில் பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து விபத்து – அதிர்ச்சி காணொளி..!

Six injured after falling from parachute in UAE

ஷார்ஜாவின் கோர் ஃபக்கானில் சனிக்கிழமை இன்று 6 பேர் பாராசூட்டில் வானில் பறந்துள்ளனர். எதிர்பாராத விவாதமாக பலத்த மழை மற்றும் அதிவேக காற்று வீசியதன் காரணமாக பாராசூட்டுகளை இணைக்கும் கயிறுகள் அறுந்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 6 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், அதில் ஒரு ஆடவர் அருகிலுள்ள பண்ணையிலும், மற்றொருவர் ஒரு ஷாப்பிங் சென்டர் அருகே சாலையில் இறங்கியதாகவும், கூறினர். ஆனால், மற்ற நான்கு பேர் எங்கு விபத்துக்குள்ளானார்கள் என்பதை காவல்துறை குறிப்பிடவில்லை.

அந்த வழியாகச் சென்ற ஒரு வாகன ஓட்டியால் எடுக்கப்பட்ட வீடியோவில் இரண்டு பேர் காற்றில் தொங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

காயமடைந்த மூன்று பேர் கோர் ஃபக்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த பாராசூட்டுகளை வாடகைக்கு கொடுத்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா? என்பதை பற்றி அறிய காவல்துறை விசாரனையைத் தொடங்கியுள்ளது.

Loading...