UAE Tamil Web

ராஸ் அல் கைமாவில் புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்கேட்டிங் பூங்கா.! எங்கே? எப்பொழுது?

new skateboard park

ராஸ் அல் கைமாவின் சக்ர் பூங்காவில் ஒரு பிரத்யேக ஸ்கேட் பூங்கா
ஒன்று, மூன்று நாள் நிகழ்வோடு வரும் பிப்ரவரி 27 வியாழக்கிழமை அன்று திறக்கப்படவுள்ளது.

பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வ திறப்பு விழாவின் போது 15 வயதான இசபெல்லி அவிலா, அவரது தந்தை கார்சியா ரோட்ரிக்ஸ் மற்றும் 13 வயதான வர்ஜீனியா ஃபோர்ட்ஸ் அகுவாஸ் போன்ற சர்வதேச ஸ்கேட்போர்டு வீரர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும் பார்வையாளர்களுக்கு சிறப்பாக சறுக்குவதற்கு முக்கிய நுட்பங்கள், திறன்கள் மற்றும் தந்திரங்களை கற்று கொடுக்கும் வகையில், இந்த சர்வதேச வீரர்கள் ஸ்கேட்போர்டு ஒர்க்கஷாப் நடத்த உள்ளார்கள். அத்துடன் இந்த நிகழ்வில் வெளிப்புற சந்தையும் இடம்பெறும்.

RAK skateboard park

சக்ர் பூங்காவிற்குள் இருக்கும் ஒரு காஃப் மரம் ரிசர்வ் பகுதியின் ஒரு பசுமையான இடத்தை மையமாகக் கொண்டு, இந்த ஸ்கேட்டிங் தலம் அமைந்துள்ளது.

பிரமிடுகள், லெட்ஜ்கள் போன்ற பலவகைப்பட்ட தொடர் தடைகளுக்கு எதிராக பிற ஸ்கேட்டர்களை இந்த பூங்காவில் எதிர்கொள்ள முடியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ந்து வரும் ஸ்கேட்டிங் சமூகத்திற்காக 620 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த வெளிப்புற இடம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

new skateboard park
0 Shares
Share via
Copy link