26 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

துபாய்க்கு விரைவில் வருகிறது ‘Sky Pods’ ..! கையெழுத்தானது ஒப்பந்தம்..!

sky pods

Sky Pods க்கான தேடலில் துபாய் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 26 அன்று சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்(RTA), Sky Pods ஸை உருவாக்கும் உலகின் முன்னணி நிறுவனமான இங்கிலாந்தின் பீம்கார் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

sky pods1
Image Credits- Khaleej Times

Sky Pods மிகவும் எடை குறைவானது மற்றும் அதிக சக்தி நிறைந்தது. இதனுள் வலிமையான எஃகு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

sky pods2
Image Credits- Khaleej Times

இது செயல்படுவதற்கு வழக்கமாக தேவைப்படும் இடத்தை விட பலமடங்கு குறைவான இடமே போதுமானதாகும்.

sky pods3
Image Credits- Khaleej Times

சாலை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, Sky Pods பயணத்தின் நேரத்தை குறைப்பதற்கு நல்ல தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.

sky pods4
Image Credits- Khaleej Times

வேகம், பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடு போன்றவை இந்த Sky Pods இன் சிறப்பம்சம் ஆகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

sky pods5
Image Credits- Khaleej Times

துபாயில் பயணம் செய்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத மக்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் தன்னாட்சி போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்(RTA) மேற்கொண்ட முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று RTA வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் மட்டர் முகமது கூறினார்.

sky pods6
Image Credits- Khaleej Times

ஒப்பந்தம் கையெழுத்தான போது இங்கிலாந்தின் போக்குவரத்து துறையின் மாநில அமைச்சர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸ் உடன் இருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பீம்காரின் தனித்துவமான வான்வெளி போக்குவரத்தை நாம் பயன்படுத்த முடியும். மேலும் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதுமையான தொழில்நுட்ப கூட்டு முயற்சிக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஹாரிஸ் கூறினார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!