அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.
அதன் எதிரொலியாக அமீரகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசர நெருக்கடி மற்றும் தேசிய ஆணையத்தின் பேரிடர் மேலாண்மையான (NCEMA) அறிவித்திருந்தது.
அது போல தற்போது சுற்றுலா இடங்களில் சமூக இடைவெளி விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக NCEMA தெரிவித்துள்ளது.
திறந்த வெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உட்புற இடங்களில் முக கவசம் அணிவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று NCEMA அறிவித்துள்ளது.
இந்நிலையில் கண்காட்சிகள், செயல்பாடுகள், கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்ள AL HOSN கிரீன் பாஸ்-ஐ பின்பற்ற வேண்டும் அல்லது 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடிவ் PCR பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விளையாட்டு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளையும் திரும்ப பெறுவதாக NCEMA தெரிவித்துள்ளது.
