UAE- இல் வசிப்பவர்களுக்கு சில அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள்..

ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் யு.ஏ.இ. பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை, தனது அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அடிக்கடி மாறக்கூடிய நிலையற்ற வானிலை காரணமாக வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என சில அறிவுரைகளை MOIUAE இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது.

கடுமையான மழை மற்றும் வெள்ள நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று MOI சில அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு:

  • மலை பள்ளத்தாக்கான பகுதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளில் அமரவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம்.
  • செங்குத்தாக உள்ள பள்ளத்தாக்குகள் சேதம் அடைந்து இருக்கும் எனும் அச்சம் இருப்பின், அவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும்.
  • பள்ளத்தாக்கான நீரோட்ட பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது, நீரின் அழுத்தம் மற்றும் ஓட்டம் அதிகம் எதிர்கொள்ள நேரிடும்.
  • சாலைகள் மற்றும் பாலங்களில் நீரின் அளவு மற்றும் ஓட்டம் அதிகமாக இருக்கலாம்.
  • உங்கள் பிள்ளைகளை குளங்கள் மற்றும் நீர் நிலைகள் அருகே விளையாட அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது.
  • கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் சிதைவு அடையலாம்.
  • கடுமையான மழை மற்றும் வெள்ளம் கரைபுரண்டு பள்ளத்தாக்கில் ஒடும் காட்சியை நீங்கள் காணும்போது, அது உங்களை நிலைகுலைய செய்துவிடும். மேலும், விபத்திற்கும் வழி வகுக்கும்.

மேற்கூறிய சில அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் UAE பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.