வயதான தந்தையை வீட்டை விட்டு வெளியே துரத்திய மகன்.! அவரை மீட்ட அமீரக காவல்துறை.!

son sends dad out of d home

தனது சொந்த குழந்தைகளால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட 68 வயதான ஜி.சி.சி நாட்டவரை ஷார்ஜா போலீசார் மீட்டுள்ளனர்.

வசித் காவல் நிலைய இயக்குநர் கோல் அப்துல்லா அல் நக்பி கூறுகையில், “குடும்பத் தகராறைத் தொடர்ந்து அந்த முதியோரது மகன் துஷ்பிரயோகம் செய்து அந்த வயதானவரை வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த முதியவர் காவல் நிலையத்தை அணுகி உதவி கேட்டார். தனக்கு செல்ல இடம் இல்லை என்று எங்களிடம் கூறினார்.” என்றார்.

காவல்துறை அதிகாரிகள் அந்த வயதான தந்தையை வரவேற்று, மகனை காவல் நிலையத்திற்கு அழைப்பதற்கு முன்பு அமைதிப்படுத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் குடும்ப விவகார வல்லுநர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் மனம்விட்டு பேசினார்கள்.

கோல் அல் நக்பி கூறுகையில், “அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அந்த முதியோரின் மகன் தனது மோசமான நடத்தை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குடும்பத்தில் ஏற்பட்ட சில தகராறுகள் மற்றும் துன்பத்தின் விளைவாகும் என்று வருத்தத்துடன் கூறினார். குடும்பத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டபோது, அவரது மகன், மனநிலையை இழந்து இந்த முடிவுக்கு வந்துள்ளார். இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் அவரும் அவரது சகோதரர்களும் தந்தையிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த ஒரு நெகிழ்வான காட்சி, போலீஸ் அதிகாரிகள் உட்பட ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்தது. பின்னர் அந்த பிள்ளைகள் அவர்களுது தந்தையை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.” என்றார்.

மேலும் அவர், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தின் படி, பெற்றோர்கள் மதிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கு பெற்றோரின் பங்கைப் புறக்கணித்து, ஞானத்துடனும் விவேகத்துடனும் சிக்கலைக் கையாளத் தவறிய அந்த இளம் வயது மகனின் தனிப்பட்ட நடத்தையாகக் கருதப்படுகிறது.” என்று கூறுகிறார்.

கூடுதலாக அந்த முதியோரின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சர்ச்சைக்குரிய இரு தரப்பினரை வரவழைத்து அவர்கள் அனைவர் தரப்பு வாதங்களை கேட்பதன் மூலம் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சமூக போலீஸ் பிரிவு பெரும் பங்கு வகிக்கிறது என்கின்றார்.

Loading...