UAE Tamil Web

அமீரகம் – தென் கொரியா இடையே 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

South Korea

அமீரகம் – தென் கொரியா இடையே 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தென் கொரிய மிட்-ரேஞ்ச் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமீரகம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நேற்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அவருடன் வந்திருந்த தூதுக் குழுவை துபாய் எக்ஸ்போவில் சந்தித்தார்.அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, தென் கொரிய மிட்-ரேஞ்ச் ஒன்றை அமீரகம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சுமார் $3.5 பில்லியன் மதிப்புடையது என்று தென் கொரியாவின் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமீரகத்திற்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை அதிபர் ஜே-இன் சனிக்கிழமை தொடங்கினார். நேற்றைய, சந்திப்பின் போது, ​​ ஷேக் முகமது அமீரகம் மற்றும் கொரிய குடியரசு இடையே உள்ள கூட்டாண்மை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க இரு நாடுகளின் ஆர்வத்தையும் பாராட்டினார்.

“அமீரகம் மற்றும் கொரிய குடியரசு இடையேயான கூட்டாண்மை பொருளாதாரம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கலாச்சாரம், விண்வெளி, ஆற்றல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகிறது” என்று ஷேக் முகமது கூறினார். அமீரகத்துடன் கொரியா சிறந்த வர்த்தகத்தை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

FJO8-4EaAAYlKPiகடந்த நவம்பரில் துபாயின் விமான வர்த்தக கண்காட்சியின் போது, அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தென் கொரியாவின் M-SAM ஐ வாங்க திட்டமிட்டுள்ளதாக ட்வீட் செய்திருந்தது. தேசிய வான் பாதுகாப்பின் திறன்களுக்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் கூறப்பட்டது.

ஷேக் முகமது இந்த சந்திப்பின் புகைப்படங்களை வெளியிட்டு, உலகின் முன்னணி கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பவர்களில் ஒன்றான தென் கொரியாவுடன் அமீரகம், ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மையை நாடுவதாக தெரிவித்துள்ளார்.

“அமீரகம் மற்றும் கொரிய குடியரசிற்கு இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பராக்கா அணுசக்தி ஆலை போன்ற முக்கிய திட்டங்கள் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஆழத்திற்கு சான்றாகும். துபாய் எக்ஸ்போ 2020ல் கொரிய குடியரசு பங்கேற்பதை நாங்கள் பாராட்டுகிறோம் ” என்று ஷேக் முகமது கூறியுள்ளார். Agreement“அமீரகம் மற்றும் கொரியா குடியரசிற்கு இடையிலான உறவுகள் பல முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் அல்லாத வர்த்தகத்தின் அளவு 2020 இல் $4.8 பில்லியன் (சுமார் Dh பில்லியன்) அளவு உயர்ந்தது என்று ஷேக் முகமது கூறினார். அடுத்த கட்டத்தில், பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், முன்னுரிமைத் துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்வதற்கும் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றும் ஷேக் முகமது கூறினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர். கொரிய அதிபர் மூன் ஜே-இன், விருந்தோம்பலுக்கும், இரு நட்பு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுகளை எடுத்துரைக்கும் வகையிலும், அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது மற்றும் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

ஷேக் முகமது பின் ரஷீத் மற்றும் மூன் ஜே-இன் முன்னிலையில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொரிய குடியரசின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் திட்ட நிர்வாகம் (DAPA) இடையே பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நடுத்தர மற்றும் நீண்ட கால ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்காப்பு அமைச்சின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கான உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் முபாரக் கஃபான் அல் ஜாப்ரி மற்றும் கொரியாவின் DAPA அமைச்சர் காங் யூன் ஹோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

UAE இன் Tawazun பொருளாதார கவுன்சில் (Tawazun) கொரியாவின் LIG Nex1 Co உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Tawazun டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷனின் CEO Muammar Abdulla Abushehab மற்றும் Global Business Group இன் நிர்வாக துணைத் தலைவர் Hyeonsoo Lee ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தவாசுன் மற்றும் கொரியாவின் ஹன்வா சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு இடையேயான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முயம்மர் அப்துல்லா அபுஷேஹாப் மற்றும் ஹன்வா சிஸ்டம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சோன் ஜே-ல் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டன.

துபாயின் எக்ஸ்போ 2020 தென் கொரியா நாட்டின் உயர் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார சாதனைகளை பெருமைப்படுத்துவதாக தென் கொரிய அதிபர் மூன் பாராட்டினார். இந்த துபாய் எக்ஸ்போ, நாடுகள் தலைமுறைகளையும் தேசிய எல்லைகளையும் கடந்து ஒன்றிணைந்து பயணிக்க உதவுவதாகவும் கூறினார்.

 வளைகுடாவில் இருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் புதைபடிவ எரிபொருட்களை தென் கொரியா இறக்குமதி செய்கிறது. அதன் ஆற்றல் மிகுந்த பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. கார்கள் முதல் பெட்ரோ கெமிக்கல்ஸ் வரை உற்பத்தித் தொழில்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் 2019 தரவுகளின்படி, அமீரகத்திலிருந்து சியோலுக்கு 8% எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் சமீப மாதங்களில் ஹைட்ரஜனில் கவனம் செலுத்தி, அதிக அளவிலான எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்கி, நீல அம்மோனியாவை ஜப்பானுக்கு அனுப்புகிறது.

“இரு நாடுகளும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஹைட்ரஜன் தொழில்துறையை மேம்படுத்தினால், அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்” என்று துபாய் எக்ஸ்போவில் மூன் கூறியதாக Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹைட்ரஜனில் இயங்கும் பொது போக்குவரத்து அமைப்பை உருவாக்க சியோல் அமீரகத்துக்கு உதவுவதாகவும் தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்துள்ளார்.

South Korea
0 Shares
Share via
Copy link