துபாய் மக்களின் கண்களை கவரும் வகையில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டது தான் சேக் ஜைத் சாலையில் உள்ள அருங்காட்சியகம்.
உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களில் துபாயின் இந்த ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’ ஒன்று. இந்த அருங்காட்சியகம் 22.02.2022 அன்று திறக்கப்படும் என துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விண்கலம் தோற்றம் அளிக்கும் ஒரு பறக்கும் பொருள், மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தில் தரையிறங்குவது போன்ற வீடியோ ஒன்றை வெள்ளிக்கிழமை துபாய் அரசு ஊடக பகிர்ந்துள்ளது. 30 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The most beautiful building on earth @MOTF set for grand opening on 22-2-2022 in #Dubai. pic.twitter.com/H8NvCqLfXc
— Dubai Media Office (@DXBMediaOffice) February 18, 2022
துபாய் சேக் ஜைத் சாலையில் உள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தில் ஒரு விண்கலம் தரையிறங்குவது போன்று அந்த வீடியோ உள்ளது. இதை காண்போருக்கு பெரும் ஷாக் ஆக உள்ளது. ஏனென்றால் இது உண்மையா அல்லது பொய்யா என்பது கூட தெரியாதவாறு மிகத் துள்ளியமான முறையில் தொழில்நுட்பங்களை கொண்டு வீடியோவை உருவாக்கி உள்ளது துபாய் அரசு.
துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பார்வையாளர்கள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலம்.
இதுவரை யாரும் கண்டிடாத விதத்தில் வலைவான வட்ட வடிவில் அமைந்துள்ளதால் காண்போருக்கு என்ன கட்டிடம் என்றுக் கூட தெரியாமல் இருந்தது. அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதியில் அரபு மொழிகளால் பொறிக்கப்பட்டு, அதிலிருந்து ஒளி வருவதுபோல இருப்பதால் காண்போரின் கண்களை கவர்ந்து இழுக்கிறது.