UAE Tamil Web

1 திர்ஹம்ஸில் விமான டிக்கெட் – பிரபல விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

SEBU

பிலிப்பைன்ஸ் நாட்டின் 123 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டைச் சேர்ந்த செபு பசிபிக் விமான நிறுவனம் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட்களை 1 திர்ஹம்ஸ்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சிறப்புத் திட்டத்தின் மூலமாக துபாய் – மணிலா இடையே நீங்கள் 1 திர்ஹம்ஸ் செலவில் டிக்கெட் வாங்கலாம். நவம்பர் 1, 2021 முதல் மார்ச் 26, 2022 வரையிலான தேதிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்களை ஜூன் 12 – 14 ஆகிய மூன்று நாட்களில் முன்பதிவு செய்பவர்கள் இந்த அருமையான ஆஃபரை அனுபவிக்க முடியும்.

“இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் எங்கள் 25 வது ஆண்டு விழாவை நாங்கள் தொடர்ந்து கொண்டாடும் இந்நேரத்தில், எங்கள் நாட்டின் பயண மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதற்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்று செபு பசிபிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ துணைத் தலைவர் கேண்டீஸ் ஐயோக் கூறினார்.

இதுதவிர பயணிகளின் பொருட்களுக்கான கட்டணத்தில் (CEB Fare) 25 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாகவும், வாடிக்கையாளர்கள் மறு முன்பதிவுக்கான கட்டணங்களை நிரந்தரமாக நீக்கியதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது பயண நிதியை (Travel Funds) பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்யலாம் எனவும் இரண்டாம் நாளில் இருந்து கட்டண மையங்கள் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் www.cebupacificair.com அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அமீரகத்தில் அமைந்துள்ள அல்-அன்சாரி எக்ஸ்சேஞ்ச் மற்றும் அல் ரைஸ் டிராவல்ஸ் ஆகியவற்றின் எந்தவொரு கிளையிலும் பணத்தை செலுத்த விரும்புவோர் முன்பதிவுக்கு 8 மணிநேரத்திற்கு முன்னர் பணத்தை கவுண்டரில் செலுத்தலாம்.

மணிலாவிலிருந்து துபாய், ஹாங்காங், நாகோயா, நரிட்டா, சியோல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆறு சர்வதேச இடங்கள் தவிர, செபு பசிபிக் நிறுவனம் தற்போது மணிலா மற்றும் செபு மையங்களில் இருந்து 32 உள்நாட்டு இடங்களுக்கும் விமானங்களை இயக்குகிறது.

SEBU
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap