ஷார்ஜாவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் ஏர் அரேபியா விமான நிறுவனம் அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அமீரகத்திலிருந்து இந்தியாவின் முன்னணி நகரங்களுக்கு 300 திர்ஹம்ஸ் செலவில் பயணிக்கும் விதத்தில் அதிரடி ஆஃபரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 11 இந்திய நகரங்களுக்கு 300 திர்ஹம்ஸ் -க்கு விமான டிக்கெட் கிடைக்கிறது. அதன்படி, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் நபர்களுக்கு 300 திர்ஹம்ஸ் கட்டணமும் கோழிக்கோடு மற்றும் சென்னை பயணிப்பவர்களுக்கு 310 திர்ஹம்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களும் விமான கட்டணமும்
- திருவனந்தபுரம் – 320 திர்ஹம்ஸ்
- அகமதாபாத் – 350 திர்ஹம்ஸ்
- கோயம்பத்தூர் – 398 திர்ஹம்ஸ்
- பெங்களூரு – 450 திர்ஹம்ஸ்
- கோவா – 600 திர்ஹம்ஸ்
