ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.
இது குறித்து BAPS இந்து கோவிலில் முக்கிய பொருப்பாளர் சுவாமிநாராயண் சன்ஸ்தா கூறுகையில், “மிகுந்த துக்கமான இந்த தருணத்தில், எங்கள் அன்புக்குரிய ஆட்சியாளர் மரியாதைக்குறிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு அரச குடும்பம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதிபர் ஷேக் கலீஃபா, இந்த தேசத்தை அமைதி மற்றும் செழுமையின் வீடாகவும், நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாகவும் மாற்றியதாக சுவாமிநாராயண் மேலும் கூறினார்.