UAE Tamil Web

அமீரகம்.. Wadi Madiq – Kalba சாலையில் புதிய வேக வரம்பு அறிவிப்பு – ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்!

அமீரகத்தில் Wadi Madiq – Kalba சாலைக்கான வேக வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக ஷார்ஜாவில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்த சாலையில் வாகனங்கள் 80 கிமீ வேகத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இனி 100 கிமீ வேகத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சாலையின் அருகில் குடியிருப்புகள் அல்லது நகர்ப்புற மையங்கள் எதுவும் இல்லாததாலும், சாலை சீராக உள்ளதாலும் அங்கு நடப்பில் இருந்த வேக அளவு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

E102 என்றும் அழைக்கப்படும் இந்த சாலை, புஜைரா எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடி மடிக் மற்றும் கல்பாவை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீரக சாலைகளில் தேய்ந்து போன டயர்கள் கொண்டு வாகனம் ஓட்டுவதால் எந்தவகை ஆபத்தை வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர் என்பது குறித்து சில தினங்களுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டது துபாய் போலீஸ் துறை.

கடந்த ஆண்டு, சேதமடைந்த அல்லது தேய்ந்து போன டயர்களுடன் வாகனம் ஓட்டி பிடிபட்ட வாகன ஓட்டிகளுக்கு 4 Black Pointsகளுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் அந்த வாகனங்கள் ஒரு வாரம் ஜப்தி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வண்டியின் டயர்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்பதை மறந்துவிட கூடாது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap