மதுரையிலிருந்து ஷார்ஜாவுக்கான விமான சேவை நிறுத்த இருப்பதாகவும், மார்ச் 27ஆம் தேதி முதல் மீண்டும் மதுரை முதல் கொழும்பு விமான சேவை தொடங்க உள்ளதாக SPICEJET நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 வரை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்துள்ளதால் இந்திய அரசு சர்வதேச விமான சேவை தடையை நீக்க முடிவு செய்தது.
இந்த நிலையில் மதுரையில் இருந்து கொழும்புக்கு மார்ச் 27ஆம் தேதி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து துபாய்க்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விமான சேவை இயங்கி வந்த நிலையில் தற்போது தினசரி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து SPICEJET விமான போகுவரத்து சேவை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த சேவை நிறுத்தப்படுவதாக SPICEJET நிறுவனம் தெரிவித்துள்ளது.