இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் துபாய்க்கு மட்டுமே நேரடி விமான சேவைகளை வழங்கிவந்த நிலையில் தற்போது ஷார்ஜாவிற்கும் ஜனவரி 8 ஆம் தேதிமுதல் விமான சேவைகளைத் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மதுரை – ஷார்ஜாவிற்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன், சனி) விமானங்கள் இயக்கப்படும். அதேபோல, ஷார்ஜா – மதுரைக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் (செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு) விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நகரங்களுக்கு இடையே விமானங்கள் இயக்கப்படும் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புறப்படும் இடம் | புறப்படும் நேரம் | செல்லும் இடம் | செல்லும் நேரம் |
மதுரை | மதியம் 12.30 | ஷார்ஜா | மாலை 3.30 |
ஷார்ஜா | அதிகாலை 2.15 | மதுரை | காலை 7.50 |
கட்டணம்
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளங்கள் அளித்த தரவுகளின்படி வரும் ஜனவரி 8 ஆம் தேதி மதுரையிலிருந்து ஷார்ஜா பயணிக்க அடிப்படைக் கட்டணமாக 15,728 ரூபாயும், அடுத்தநாள் (ஜனவரி 9 ஆம் தேதி) ஷார்ஜாவிலிருந்து மதுரைக்குச் செல்ல 9217 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது.
இதுபோலவே, ஷார்ஜா – புனே, மங்களூர் இடையேயும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.