UAE Tamil Web

அமீரகம்.. தொழிலாளர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டி – ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்திய துபாய் போலீசார்

துபாய் காவல்துறை, சமீபத்தில் 350 தொழிலாளர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேண ஊக்குவிப்பதற்காக ஒரு விளையாட்டு நிகழ்வை (Sports Event) ஏற்பாடு செய்துள்ளது. அமீரகத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த விளையாட்டு தினமானது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதையும் அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமூக மகிழ்ச்சிக்கான பொதுத் துறையின் விளையாட்டு விவகாரத் துறையின் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் அப்துல் பாசித் அலி அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்த விளையாட்டு நிகழ்வு துபாய் காவல்துறையின் ஆர்வத்தில் உருவாக்கப்பட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும், முக்கியப் பங்காற்றுகின்ற தொழிலாளர்களின் நலனுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“விளையாட்டு நிகழ்வில் பல உடல் ரீதியான செயல்பாடுகள் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு விரிவுரைகள் இடம்பெற்றன. இது தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதையும் உள்ளடக்கியது”, என்று கூறி லெப்டினன்ட் கர்னல் அப்துல் ரஹ்மான் முடித்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றது தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap