UAE Tamil Web

அமீரகம் – இலங்கை இடையே ஜூலை 13 வரை விமானங்கள் இயக்கப்படாது – எமிரேட்ஸ் அறிவிப்பு..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் விமானங்களுக்கு ஜூலை 13 வரை இலங்கை அரசு தற்காலிக தடை விதித்துள்ளதாக துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அமீரகம், கத்தார், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களை செலவிட்டோர் எமிரேட்ஸ் மூலமாக கொழும்புவிற்கு பயணிக்க  இயலாது. இருப்பினும் டிரான்ஸிட் பயணிகளைப் பொறுத்தவரையில் விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதிகளை விட்டு வெளியேறாத பயணிகள் இலங்கை செல்லலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது டிக்கெட்களை எதிர்வரும் தேதிகளுக்கு மாற்றிக்கொள்ள விமான நிறுவனத்தினை தொடர்புகொள்ளவேண்டிய அவசியமில்லை. மறு முன்பதிவு செய்ய, மக்கள் தங்கள் பயண முகவர் அல்லது முன்பதிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது, இது ஜூலை 5, 2021 வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் விதிமுறைகளை தளர்த்திதைத் தொடர்ந்து அமீரகத்தில் இருந்து அதிகமானோர் இலங்கை பயணித்தது குறிப்பிடத்தக்கது.

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap