UAE Tamil Web

“ஒரே போட்டியில் என் வாழ்க்கை மாறிவிட்டது” – பிக் டிக்கெட்டில் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை தட்டிச்சென்ற பொறியாளர்..!

Rasika_

அபுதாபியில் நேற்று பிக் டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த ரசிகா (Rasika Jds) என்பார் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

துபாயில் பொறியாளராக பணிபுரியும் ரசிகா ராஸ் அல் கைமாவில் வசித்துவருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி தனது நண்பரிடம் டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்குமாறு கூறவே 213288 என்ற எண் கொண்ட டிக்கெட்டை அவரது நண்பர் முகமது மிஸ்ஃபாக் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் மிஸ்ஃபாக் கடந்த முறை பிக் டிக்கெட்டில் 12 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்றவர். அவரது அதிர்ஷ்டம் இந்தமுறையும் வெற்றியை அளித்திருக்கிறது.

8 பேர் சேர்ந்து டிக்கெட்டை வாங்கியதாகவும் பரிசுத்தொகையை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் ரசிகா தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர்,”ஒரே போட்டியில் வாழ்க்கை மாறிவிட்டது” என உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.

ரசிகாவின் மனைவி மற்றும் நான்கு மகன்கள் இலங்கையின் கொழும்புவில் வசித்துவருகின்றனர்.