UAE Tamil Web

“கொரோனாவிலிருந்து மீண்டுவர இந்தியாவிற்கு பக்கபலமாய் இருப்போம்” – அமீரக அரசு அறிவிப்பு..!

sheikh-abdullah,-uae,-israel,-trump,-netanyahu,-bahrain,-peace-treaty

இந்த மோசமான கொரோனா சூழலில் இருந்து இந்தியா மீண்டும் வரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா – அமீரகம் இடையேயான நட்பு இந்த இக்கட்டான சூழலிலும் தொடரும் எனவும் கொரோனாவை முன்னிட்டு இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமீரகம் பக்கபலமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான டாக்டர்.ஜெய்ஷங்கர் அவர்களுக்கு போன் மூலமாகத் தொடர்புகொண்டு பேசிய பெருமதிப்பிற்குரிய ஷேக் அப்துல்லா பின் சயீத்,” கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் அமீரகமும் அதன் மக்களும் எப்போதும் உறுதுணையாக இருப்பர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தொற்றுநோயால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டோர் அனைவரும் விரைவில் குணமாக வாழ்த்துவதாகவும் அப்துல்லா தெரிவித்தார். இந்தியாவும் அமீரகமும் நீண்டகால நட்பு நாடுகள். இந்தியாவின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணைநிற்பது அமீரகத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தக் கொடிய தோற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவர உலகளாவிய திட்டங்கள் அவசியமானதாகவும் அதன்மூலமாக மட்டுமே அதை சாதிக்க முடியும் எனவும் அப்துல்லா குறிப்பிட்டார்.

sheikh-abdullah,-uae,-israel,-trump,-netanyahu,-bahrain,-peace-treaty
0 Shares
Share via
Copy link