38.8 C
Dubai
August 15, 2020
UAE Tamil Web

அபுதாபியில் உள்ள ஒரு கடைக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்.! எதற்காக.?

shop fined 1M AED

அபுதாபியில், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த ஒரு கடைக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கடையின் ஒரு பகுதியும் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அந்த (பெயர் வெளியிடப்படாத) கடையில் இருந்து வாங்கிய சில ஜூஸ்-ஐ (Juice) உட்கொண்டு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இரண்டு நுகர்வோர் அபுதாபி அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் விசாரணையில், காலாவதியான பல உணவுப் பொருட்கள் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், கடையையும் அதன் உரிமையாளரையும் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு வழக்கறிஞர்களைத் தூண்டினர்.

அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் காலாவதியான பொருட்களை விற்ற அந்த ஸ்தாபனத்திற்கு, மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பொது சுகாதார சட்டத்தை மீறியதாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது வழக்கு விசாரணையின் மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை உட்கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, தற்காலிக இழப்பீட்டு கட்டணமாக 21,000 திர்ஹம்ஸ் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு எதிராக அந்த கடையின் உரிமையாளர் அபுதாபியின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால், உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்து முந்தைய தீர்ப்புகளை சரியென பராமரித்தது.

இது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள், காலாவதியான பொருட்களை உட்கொண்ட பின்னர் அவர்கள் சந்தித்த சேதங்களுக்கு இழப்பீடு கோர உணவு கடைக்கு எதிராக சிவில் சட்ட வழக்குகளை தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க.!