34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்து சிக்கிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தை – மருத்துவ செலவுகளை சமாளிக்க இயலாமல் தவிக்கும் இந்திய தம்பதி!

Indian Couple

துபாய் வாழ் இந்தியரான முகமது மொசான்னா கான் (Mohammed Mosanna Khan) இந்தியாவில் தனது தந்தை இறந்ததை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த தனது மனைவி மற்றும் அம்மாவை துபாய்க்கு அழைத்து வந்திருக்கிறார். கன நேரத்தில் கொரோனா சூழ்நிலையை மாற்ற இருந்ததை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

கடந்த ஜூன் 15 அன்று முகமதின் மனைவி நஜ்ரீனுக்கு குழந்தை பிறந்தது. தங்களுடைய முதல் குழந்தையின் வருகையை இருவரும் கொண்டாடினாலும், மருத்துவ செலவுகள் மற்றும் ஆவணப்படுத்துதல் வேலைகள் இந்த இந்தியத் தம்பதியை கலங்கடித்துக்கொண்டு இருக்கின்றன.

தனது சான்றளிக்கப்பட்ட திருமண சான்றிதழை சமர்ப்பிக்காததால் முகமதுவால் தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற இயலவில்லை. அதனால் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் தனக்கு உதவும்படி விண்ணப்பித்தார் முகமது.

அமீரக வாழ் இந்தியர்களுக்கு பல உதவிகளை செய்து வரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் அவர்களது குழுவினரும் முகமதுவிற்கு உதவ முன்வந்தனர்.

இதுகுறித்துப் பேசிய இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பு, தகவல் மற்றும் கலாச்சார அதிகாரியான திரு.நீரஜ் அகர்வால்,” எதிர்பாராத சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் இந்தியர்களைத் தொடர்ந்து கண்காணித்து, எங்களது தரப்பிலிருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய காத்திருக்கிறோம்” என்றார்.

முகமதுவின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணியினைத் துரிதப்படுத்தும் விதமாக தூதரக அதிகாரிகள் கடிதமொன்றை முகமதிடம் அளித்திருக்கிறார்கள்.

ஆனாலும் முகமதுவின் சிக்கல் தீர்ந்தபாடில்லை. “துணைத் தூதரக அளித்த கடிதத்தின் மூலம் என்னால் எனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற முடியும் என நினைத்தேன். அந்தக் கடிதத்தினை மருத்துவமனையில் சமர்ப்பித்தேன். பதிலுக்கு குழந்தையின் பிறப்பு குறித்த தகவலடங்கிய குறிப்பு மட்டுமே என்னிடம் தரப்பட்டது. பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் அதிகாரிகள் என் மகளுடைய ஃபைலை திறக்கக்கூட மாட்டார்கள். இதனால் குழந்தைக்கு அளிக்கப்படும் நோய் எதிர்ப்புத் திறனூட்டல் ஒத்திவைக்கப்படலாம்” என்றார் முகமது.

ஒருபுறம் இந்த சிக்கல் இருக்க மற்றொரு புறம் தனது மனைவி நஜ்ரீனுக்கு போதுமான காப்பீடு இல்லாததால் மருத்துவ செலவுகளை சமாளிக்க இயலாமல் தவிக்கிறார் முகமது.

“நஜ்ரீன் எங்களது முதல் குழந்தையை ஜூன் 15 ஆம் தேதி பெற்றெடுத்தார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நான் இப்போதிருக்கும் சூழ்நிலையில் இந்த பொருளாதார சிக்கலிலிருந்து எப்படி மீளப்போகிறேன் என்பது தெரியவில்லை” என்றார் முகமது.

“கடந்த ஜூன் 13 ஆம் தேதி, பிரசவ வலி கண்டவுடன் நஜ்ரீனை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது சுகப்பிரசவம் நடைபெறும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் நிலைமை அவ்வாறு அமையவில்லை. மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சையான சிசேரியன் முறையினைப் பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக கூறவே, தாமதித்தல் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்தானது என்பதால் உடனடியாக நான் மருத்துவர்களின் ஆலோசனைக்கு சம்மதம் தெரிவித்தேன். எங்களுடைய தோராய மருத்துவ கட்டணம் 20,000 திர்ஹம்ஸ் வந்துவிட்டது” என்றார் முகமது சோகமாக.

 

இதையும் படிங்க.!