39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் – சோகத்தில் மாணவர்கள்!

hindi teacher

அபுதாபியில் உள்ள சன் ரைஸ் பள்ளியில் மூத்த ஹிந்தி ஆசிரியராகப் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த அணில் குமார் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த அணில் குமார் (50) ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா காரணமாக இறந்ததால் அவர் பணிபுரிந்த சன் ரைஸ் பள்ளியே இருளில் தவிக்கிறது.

இதுகுறித்துப் பேசிய சன் ரைஸ் பள்ளியின் தலைவர் தாக்கூர் முல்சந்தானி (Thakur Mulchandani),” எங்களது நிர்வாகம், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். இத்தனை ஆண்டுகாலமாக அவர் எங்களுடன் கொண்டிருந்த பிணைப்பின் வலிமையால் இந்த இழப்பு தாங்க முடியாததாக இருக்கிறது. இந்த துக்கச் செய்தி தந்த நடுக்கம் இன்னும்  இப்பள்ளியை விட்டு அகலவில்லை” என்றார்.

“சுவாசக் கோளாறினால் அவதிப்பட்ட குமார் மே 7 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது” என முல்சந்தானி தெரிவித்தார்.

மாணவர்களிடையே பாடங்களை  படைப்பூக்கத்துடன் கூடிய வகையில் கற்றுத்தரும் எழுச்சிமிக்க ஆசிரியராக அவர் இருந்ததாகவும். மாணவர்கள் அவரிடம் பாடங்களை விரும்பிப் படித்ததாகவும் பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் “மாணவர்களை ஊக்குவித்து, அதன்மூலம் அவர்களின் திறமையை வெளிக்கொணர்வதில் குமார் மிகுந்த அனுபவம் பெற்றவராக இருந்தார். இந்தித் துறைக்கு உறுதுணையாகவும், பலமாகவும் அவர் விளங்கினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டிய அறிவுரை அளிக்கும் நபராகவும் குமார் இருந்தார்” என முல்சந்தானி தெரிவித்தார்.

அவர் எப்போதும் அணுகக்கூடிய ஆசிரியராக இருந்ததாகவும், நட்புடனும் திறந்த மனதுடனும் பழகக்கூடிய அவரை இழந்தது கடுமையான வருத்தத்தை அளிப்பதாகவும் முல்சந்தானி தெரிவித்தார்.

குமாருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவருடைய மனைவி ரஜினி அதே பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!