அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் உள் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, பகல் நேரத்தில் வானம் வெப்பநிலையில் இருக்கும், மேலும் அதிகளவில் காற்றும் சில நேரங்களில் மேகமூட்டமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில கடலோரப் பகுதிகளில் இன்று இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை ஈரப்பதம் இருக்கும் என்றும் லேசான முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.