UAE Tamil Web

சவூதியில் பிறை தென்படவில்லை – ஜூலை 20 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்படும் என அறிவிப்பு..!

Eid-Al-Fitr-Eid-Al-Adha_

சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்படாததால் வரும் ஜூலை 11 ஆம் தேதி து அல் ஹிஜ்ஜா மாதத்தின் முதல் தேதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழக்கப்படி து அல் ஹிஜ்ஜாவின் 10 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா பண்டிகை கொண்டாடப்படும்.

அதன்படி, ஜூலை 20 ஆம் தேதி ஈத் அல் அத்ஹாவாக இருக்கும். சனிக்கிழமை (இன்று) து அல் கைதாவின் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜூலை 19 ஆம் தேதி அராஃபத் தினமாக இருக்கும்.

து அல் ஹிஜ்ஜா மாதத்தில் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த சடங்குகள் ஈத் அல் அத்ஹா பண்டிகையோடு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Eid-Al-Fitr-Eid-Al-Adha_
0 Shares
Share via
Copy link