UAE Tamil Web

ஜாலியா Purchase பண்ண ரெடியா?.. துபாயில் அதிரடி ஆஃபர் மற்றும் Cash backs – நாளை துவங்கும் மூன்று நாள் Super Sale!

துபாயில் நாளை மே 27 முதல் மே 29 வரை நடைபெறும் மூன்று நாள் Super Saleன் போது வாடிக்கையாளர்கள் பல பரிசுகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வெல்லும் வாய்ப்பைப் பெறவுள்ளார்கள்.

Dubai Festival City Mallல் 1,000 திர்ஹம் அல்லது அதற்கு மேல் பொருட்களை வாங்கும் வடிக்கையாளர்கள் தங்கள் Gift Cardகளில் 10 சதவீத கேஷ்பேக்கை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 11 மணி முதல் நண்பகல் வரை, அல்லது இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஷாப்பிங் செய்யும் போது அனைத்து Purchaseக்கும் வடிக்கையாளர்கள் 20 சதவீத கேஷ்பேக் பெறுவார்கள்.

மேலும் இந்த மூன்று நாட்களில் தினமும் நடக்கும் Daily Drawவில் கலந்துகொண்டால் வாடிக்கையாளர்கள் Gift Cardகளில் 2500Dh வரை வெல்ல வாய்ப்பு உள்ளது. மூன்றாம் நாள் முடிவில் 30 வெற்றியாளர்கள் இந்த பரிசை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் டெய்ரா, சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் அல் ஷிந்தகா, சிட்டி சென்டர் மெய்செம் & மை சிட்டி சென்டர் அல் பர்ஷா, தி துபாய் உள்ளிட்ட துபாயின் அனைத்து முக்கிய ஷாப்பிங் மால்களிலும் Super Sale நடைபெறும்.

துபாய் மெரினா மால், துபாய் ஹில்ஸ் மால், தி ராஞ்ச்ஸ் சூக், தி ஸ்பிரிங்ஸ் சூக், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, மெர்கடோ & டவுன் சென்டர் ஜுமேரா, தி அவுட்லெட் வில்லேஜ், புளூவாட்டர்ஸ், ஜேபிஆர், அல் சீஃப், லா மெர், சிட்டி வாக் உள்ளிட்ட இடங்களிலும் இந்த Super Sale நடைபெறும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap