UAE Tamil Web

துபாய் அறிவித்துள்ள மாபெரும் சூப்பர் சேல்…90% தள்ளுபடியில் அனைத்து பொருட்களையும் அள்ளிக் கொள்ளலாம்!

துபாய் தனது மிகப்பெரிய வார இறுதி ஷாப்பிங்கை அறிவித்துள்ளது. இந்த மாபெரும் தள்ளுபடி ஷாப்பிங் ஆனது 3 நாள் சூப்பர் சேலாக (3DSS) மே 26 முதல் 28 வரை நடைபெறும். இந்த தள்ளுபடியில் நகரம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் மால்களில் பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தால் (DFRE) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பருவகால ஷாப்பிங் நிகழ்வில், ஃபேஷன், அழகு, லைப் ஸ்டைல், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றிற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதால் அவை அனைத்திலும் தள்ளுபடி கிடைக்கும்.

பிராண்டுகளில் KIKO Milano, Sephora, Bath & Body Works, 1915 by Ahmed Seddiqi, Rivoli, Homes R Us, Ikea, Jashanmal, Marks & Spencer, Lacoste, Better Life, Sharaf DG, Aldo and Al Jaber Optical மற்றும் பல தள்ளுபடிகள் இணைந்துள்ளன.

மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் டெய்ரா, சிட்டி சென்டர் மெய்செம் & சிட்டி சென்டர் அல் ஷிந்தகா, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, நக்கீல் மால், இபின் பட்டுடா, சர்க்கிள் மால், மெர்கடோ போன்ற ஷாப்பிங் மையங்கள் பங்கேற்கின்றன.

ஷாப்பிங் நடக்கும் இடங்கள் டவுன் சென்டர், தி பீச், ப்ளூவாட்டர்ஸ், சிட்டி வாக் மற்றும் தி அவுட்லெட் வில்லேஜ் போன்றவை ஆகும்.

Majid Al Futtaim தனது SHARE வெகுமதிகளை உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.Dh300 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்குவதற்கு 1 மில்லியன் புள்ளிகளை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்தது.

துபாயில் நீண்ட நாட்களாக தள்ளுபடி அறிவிக்கப்படாத நிலையில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி அழுது மக்கள் அனைவரிடமும் மகிழ்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

பர்னிச்சர் மற்றும் லைப் ஸ்டைல் போன்ற அனைத்திலும் தள்ளுபடிகள் அதிகபட்டுள்ளதால் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வீடு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஷாப்பிங் பங்கேற்று வீடு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் செய்யப்பட்டுள்ளனர்.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap